மாணவர்கள் மின்சாரம் போன்றவர்கள்..
சென்னையை அடுத்த பூந்தமல்லியில்' மின்சாரம்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் விடுதலை கட்சிகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு முதல் அமைச்சராக நடித்த காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் நடுவே இயக்குநர் என்.செல்வகுமாரன் படம் பற்றி நம்மிடம் பேசினார்.
“கல்வி அமைச்சர் தூயவனுக்கு (நெல்லை சிவா) முதலமைச்ர் ஆக வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை இருந்தது. தற்போது நாட்டை ஆளும் முதலமைச்சரை காலி பண்ணிவிட்டால் அந்த பதவிக்கு தானாக வந்துவிடலாம் என எண்ணி சிட்டியில் பெரிய தாதாவான கோட்டை குமாரசாமியிடம் முதல்வரை கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைக்கிறார் தூயவன்.
அதற்கான சமயம் பார்த்து முதலமைச்சர் செல்லும் காரில் வெடிகுண்டை பொருத்தி வெடிக்கச் செய்து விடுகிறான் கோட்டை குமாரசாமி (அறிமுகம் முத்துசாமி). கார் சிதறி சின்னா பின்னாமாகிறது. மீண்டும் தேர்தல் வருகிறது.
கட்சி பொறுப்பை ஏற்று களத்தில் தூயவன் உற்சாகமாக இறங்குகிறார். வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு திரும்பிய தூயவனும், கட்சிகாரர்களும், பொது மக்களும் அதிர்ச்சியாகி சிலையாக நிற்கும் அளவுக்கு அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. இறந்து போனதாக நம்பப்பட்ட முதலமைச்சர் உயிருடன் காரில் வந்து இறங்கினார். அவர் பின்னால் மாணவர் சமுதாயம் திரண்டு நின்றிருந்தது.
இதுதான் இப்போது எடுத்த காட்சி. இந்தப்படத்தை கோவை பிலிம் சிட்டிநிறுவனம் தயாரிக்கிறது. முதலமைச்சர் தமிழரசனாக தொல். திருமாவளவன் நடித்தார். நடிப்பதோடு “விழித்தெழு” … எனத் தொடங்கும் பாடலையும் இப்படத்தில் எழுதி உள்ளார். கதாநாயகனாக யுவராஜ் அறிமுகமாகிறார் கதாநாயகியாக மதுசந்தா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக செளகந்தி அறிமுகமாகிறார். “என் உயிர் தோழன்” ரமா இப்படத்தில் மீண்டும் நடிக்கிறார். இவர்களுடன் நெல்லை சிவா, பாலாசிங், அஞ்சு, கானா உலகநாதன் நடிக்கின்றனர். வில்லனாக முத்துசாமி அறிமுகமாகிறார். முக்கியமான மாணவ கதாபாத்திரங்களில் பாபு, அஜய், கண்ணன், ஜான் அறிமுகமாகிறார்கள். இந்தப் படத்துக்கு கே.வி. சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அதே மாதிரி டி.அதவன் இசையமைக்கிறார்….” என்றார்.
மின்சாரம் என்ற தலைப்பு வைத்திருப்பது ஏன்?.
"மாணவர்கள் மின்சாரத்தை போன்றவர்கள். மாணவர் சக்திக்கும் மின்சக்திக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டடையும் எளிதில் மதிப்பிட முடியாது. முறையான வழியில் செலுத்தப்பட்டால் பல முன்னேற்றங்களை அடைய முடியும். தவறாகக் கையாண்டால் சம்பந்தப்பட்டவர்களையே காப்பாற்ற முடியாது. இப்படி மாணவர்களுக்கும் மின்சாரத்துக்கும் ஒரே தன்மை இருக்கிறது. இதை மையமாக கொண்ட கரு என்பதால் மின்சாரம் என பெயர் வைத்துள்ளேன்”.
தொல். திருமாவளவனை பாடல் எழுத வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எப்படி?.
"இப்படி ஒரு எழுச்சி மிக்க பாடல் எழுத வைரமுத்து சாரை அடுத்து வேறு யாரை எழுத வைக்கலாம் என்று யோசித்தபோது ஏன் திருமாவளவன் சாரை எழுத வைக்ககூடாது என தோன்றியது. முயற்சி செய்தேன். அவரது பணி காரணமாக அது எளிதில் நிரைவேறவில்லை. இருபத்தி மூன்று தடவை அவரை சந்தித்தேன். இருபத்திநாலாவது தடவையாக சந்திக்க போன போது இன்று கட்டாயமாக எழுதி தந்து விடுகிறேன் என சொன்னதோடு காரில் ஏறி அமர்ந்தார். என்னையும் அமரச்சொன்னார். செல்போனை ஆஃப் செய்து விட்டார். கார் சென்னை நகர வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்க, நான்கு மணி நேரத்தில் இந்த பாடலை எழுதி கொடுத்தார். பாடல் வரிகளில் ஒரு வலிமை, எழுச்சி இருந்தது. மறுநாளே ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் நிச்சயம் எல்லோராலும் முணுமுணுக்கப்படும். பாடலை கேட்டாலே உடம்பில் ஒரு சக்தி வந்து விட்டது போல் தோன்றும்."
படத்தின் மூலம் வேறு என்ன சொல்ல வருகிறீர்கள்?.
"கல்லூரிக்கு இளைஞர்கள் படிச்சு பட்டம் பெறணும்னுதான் வர்றாங்க. ஆனால் அவர்களையும் ரவுடியாக்கிடுறாங்க. பேனா பிடிக்க வேண்டிய கைகளை ஆயுதம் ஏந்த வைக்கிறதே அரசாங்கம் தான். இதற்கு காவல் துறையும் உடந்தையாக இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்லயே கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. பணபலமும் அரசியல் பலமும் இருந்தால் ஒரு குற்றவாளி நிரபராதி ஆயிடுறான். பண பலமும், ஆள் பலமும் இல்லேனா ஒரு நிரபராதி குற்றவாளியாக்கப்படுகிறான். அப்படி ஆன ஒருவன் தன்னை போல் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒன்று திரட்டி களமிறங்குகிறான். மாணவர்கள் மூலம் ஒரு மெசேஜூம் சொல்லியுள்ளேன். தமிழக முதல்வர் தமிழரசனாக திருமாவளவன் நடித்துள்ளார். மிக அற்புதமான கேரக்டர். இந்த கேரக்டரில் அவர் நடித்ததோடு ஒரு எழுச்சிமிக்க பாடலையும் எழுதி கொடுத்தது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்: என்.செல்வகுமரன். எடிட்டிங்: எஸ் சலீம், சண்டைப்பயிற்சி: பம்மல் மதன், நடனம் தீனா, அக்ஷய் ஆனந்த், அஜெய்ராஜ், கலை: மோகன் ராஜேந்திரன், பாடல்கள்: தொல்.திருமாவளவன், முத்து விஜயன், சண்முக சீலன், வானவன், இணை தயாரிப்பு : கணியூர் செந்தில் குமார், தாழம்பூர் வெண்ணிலா முனுசாமி, தயாரிப்பு எம்.எஸ். தமிழரசன்,. பழனி, இலியாஸ்.
Thursday, August 5, 2010
Subscribe to:
Posts (Atom)