Saturday, February 4, 2012

SEVARKODI movie stills






sevarkkodi working stills







என் ப்ரண்ட போல யாரு மச்சான்

-கவிஞர் விவேகா

காதலைப் பற்றிப் பேச விவாதிக்க கொண்டாட குறிப்பிட்ட வயது என்கிற தகுதி தேவைப்படும். ஆனால், நட்பைப் பற்றிப் பேசவும் கொண்டாடவும் வயது வரம்பு தேவையில்லை. அதனால் தான் இன்று `என் பிரண்டைப் போல போல யாரு மச்சான்` பாடல் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது
இந்த நண்பன் படப்பாடல் நட்பு வட்டங்களில் நண்பர்கள் உலகத்தில் தேசிய கீதமாகிவிட்டது.
உரையாடல்கள், எஸ்.எம்.எஸ், காலர்ட்யூன், நெட் ஒர்க் விளம்பரம், ஃபேஸ்புக்  என்று இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சிறுவர்களும் முணு முணுக்கிறார்கள்.
ஏன் பெரியவர்களும் தங்கள் பால்ய கால நினைவுகளில் மூழ்கி,நட்பு சுரத்தை பிரித்து மீட்டு உணர்கிறார்கள்; மகிழ்கிறார்கள்.
இப்படி ஒருவெற்றியையும் கொண்டாட்டத்தையும் கொண்ட பாடலை எழுதியிருக்கும் கவிஞர் விவேகாவே எதிர் பார்க்கவில்லை.
2012 ஆம் வருடத்தின் முதல் மெகா ஹிட் படத்தின் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் பாடல் அமைந்துள்ளது
இந்த வரலாறு காணாத குளிர் காலச் சூழலில் மகிழ்ச்சியின் வெப்பத்தையே போர்வையாக்கிக் கொண்டிருக்கிற விவேகா இந்த அனுபவம் பற்றி கூறும் போது:
நண்பன் பெரிய படம். சங்கர் சார் மாபெரும் இயக்குனர். அவர் பெயரை சொன்னாலே அகில இந்திய வியாபாரம் ஆகிவிடும் அந்த அளவுக்கு வணிக மதிப்புள்ள இயக்குனர்.
அதே போல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு பாடலையும் வெற்றிப் பாடலாகக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர்.
விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா போன்ற நட்சத்திர பலம் இப்படி இயல்பாகவே படத்தின் பிரம்மாண்டம் பெரிதாகிவிட்டது. படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையான பிரம்மாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இது தான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த  இயக்குனர் திரு ஷங்கர் அவர்களுக்கும், திரு ஹாரிஸ் ஜெயராஜ்  அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்
 'ஆனந்தம்',' ரன்' , 'சமுத்திரம்', 'வானத்தைப் போல',  'திருவிளையாடல் ஆரம்பம்', 'ஈ''உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ்  சுப்ரமணியம்' உட்பட   பல படங்களில் எழுதியிருந்தாலும் விவேகாவுக்கு கந்தசாமி படத்தின் பாடல்கள் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
'கந்தசாமி' படத்தின் எட்டுப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்று அவரை உச்சத்தில் வைத்தது. அதற்குப்பின் நிறைய வெற்றிப் படங்கள், வெற்றிப் பாடல்கள் என விவேகா வெற்|றி வலம் வர ஆரம்பித்துவிட்டார்.'
ஈரம்', 'வேட்டைக்காரன்', 'மாசிலாமணி', 'வில்லு', 'குட்டி', 'சிங்கம்', 'மன்மதன் அம்பு'.. உட்பட பல படங்கள்... 2011 ஆம் ஆண்டின் அதிகமான வெற்றிப்படங்களில் வெற்றிப் பாடல்கள் கொடுத்த கவிஞராக விவேகா இருக்கிறார் 

சிறுத்தை
காவலன்
கோ
காஞ்சனா
வேலாயுதம்
வேங்கை உட்பட பல படங்களில் சென்ற ஆண்டு தன் பங்கை
சிறப்பாக செய்திருக்கிறார்.

 மொளச்சி மூணு எலைய விடல -வேலாயுதம்
 மாயம் செய்தாயோ-வேலாயுதம்
  காதல் வந்தாலே -சிங்கம்
 அமளி துமளி -கோ
 கருப்பு பேரழகா- காஞ்சனா
 கொடியவனின் உசுர எடுக்க- காஞ்சனா
 காலங்காத்தால- வேங்கை
 பெத்தவங்க பாத்து வச்ச பொண்ண எனக்குப் புடிக்கல- வேங்கை
 ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்- காவலன்
 அழகா பொறந்துப்புட்ட- சிறுத்தை
 பாம்பே பொண்ணு-வெடி
 ஒய்யால-மன்மதன் அம்பு
ஆறுபடை வேல் முருகா- மாப்பிள்ளை.......

  இவ்வளவையும் மீறி' நண்பன்' படத்தில் இவர் எழுதிய என் ஃபிரண்ட போல யாரு மச்சான் இப்போது கலக்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு பாட்டு அதிர் வேட்டு என்கிற வகையில் வெற்றியின் சிகரம் தொட்டு இருக்கிறது.
கல்லூரி மாணவர்களிடம் கலக்கிவரும் இப்பாட்டு. இவருடன் படித்த கல்லூரி நண்பர்கள் கூட தேடி பிடித்து இவரைத் தொடர்பு கொண்டு விடுபட்ட தொடர்பினை இணைத்திருப்பதகாகக் கூறுகிறார் விவேகா.
2012 ஆரம்பமே சுப்பர் ஹிட் பாடலுடன் தொடங்கி இருக்கும் விவேகாவின்
கைவசம் இப்போது எண்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.

சூர்யா நடிக்கும்: மாற்றான், சிங்கம்-2,
கார்த்தி நடிக்கும் : 'சகுனி', சுராஜ் இயக்கி கார்த்தி நடிக்கும் படம்,
விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்', வசந்த பாலன் இயக்கத்தில் 'அரவான்',
அறிவழகன் இயக்கும் 'வல்லினம்', விமல் நடிக்கும்: 'சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு', 'இஷ்டம்', ஜெயம் ரவி நடிக்கும் 'பூலோகம்' உட்பட பல படங்கள்..

*    'வேட்டைக்காரன்' படத்தில் இவர் எழுதிய
     ஒரு சின்னத் தாமரை.. பாடல்
     2010 ஆண்டின் சிறந்த பாடல்விஜய் டி வி விருது பெற்றது

*    டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ் தமிழ் சினிமாவின்
     Top 10 young talents  இல் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது

*    சினி ஃபேஷன்ஸ் குழுமம் சிறந்த பாடலாசிரியராகத் தேர்ந்தெடுத்தது

இப்படி பல பாராட்டுக்கள் தன்னை கிரியா ஊக்கியாக  ஊக்கப் படுத்துவதாக விவேகா கூறுகிறார்.

 இந்நிலையிலும் இவர் எந்தப் பாடலையும் தன் முதல் பாடலாகவும்
எந்தப் படத்தின் சூழலையும் தன் முதல் தேடலாகவும் எண்ணியே
எழுதி வருகிறார்

வாய்ப்புகளில்  எப்போதும் சிறிய படம் பெரிய படம் என்று
பிரித்துப் பார்ப்பதில்லை  இவர்

இவர் எழுதிய பாடல்களில் பல
குழந்தைகளிடமும் பெற்றுள்ள வெற்றியை நினைத்து மகிழ்கிறார்

 இயக்குனரின் கவிஞராக, இசையமைப்பாளரின் விருப்பத்துகுரிய பாடலாசிரியராக, இளைஞர்களின் ரசனையைப் பிரதிபலிக்கும் பாடலாசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்புகிறார்..

தமிழின் மீது நேசம்,
கவிதைகள் மீது பாசம்
திரைப்பாடல்களே சுவாசம்
இதுதான் இவரது கொள்கை. இதை விடுத்து வேறு தடங்களில் திசைமாறும் சபலம் சலனம் எதுவுமில்லாதது தன் பயணம். என்கிறார் தெளிவாக..

விவேகா பாடல் எழுதி வெளி வர இருக்கும் படங்கள்..

1.         மாற்றான் (சூர்யா)
2.        சிங்கம்-2  (சூர்யா)
3.       சகுனி  (கார்த்தி)
4.        சுராஜ் இயக்கும் படம் (கார்த்தி)
5.        அரவான் (வசந்த பாலன்)
6.       கரிகாலன் (விக்ரம்)
7.        வல்லினம் (நகுல்-அறிவழகன்)
8.       சிலு சிலுன்னு ஒரு சந்திப்பு (விமல்-ஓவியா)
9.       இஷ்டம்  (விமல்)
10.      பூலோகம் (ஜெயம் ரவி)
11.        அழகன் அழகி
12.      சாப்ளின் சாமந்தி
13.      கள்ளச் சிரிப்பழகா (சக்தி)
14.      ராட்டினம்
15.      அஹமது இயக்கும் படம் (ஜீவா)
16.      கலவரம் (சத்யராஜ்)
17.      கவசம்
18.     கொஞ்சம் பொய் நிறைய காதல்
19.      விண்ணோடும் முகிலோடும்
20.    முகம் நீ அகம் நான்
21.      நந்தா நந்திதா
22.     மயங்கினேன் தயங்கினேன்
23.    சொல்லித்தர நானிருக்கேன்
24.     சுற்றுப் பயணம் (வசுந்தரா தாஸ்)
25.     சிறுவாணி
26.    படம் பார்த்துக் கதை சொல்
27.     அமிர்த யோகம்
28.    காதல் பயணம்
29.    சின்னு முன்னு
30.    ஒரு வார்த்தை பேசு
31.      கூட்டாஞ்சோறு
32.    விஜய நகரம்
33.    ராமன் நல்ல பிள்ளை
34.    ல்தல்காதல்
35.    250
36.    ஐவர் பட்டாளம்
37.    ஆனந்தத் தொல்லை
38.   திக்.. திக்..
39.    எனக்கென ஒரு வரம்
40.    ஏழரை
41.      என் காதல் தேவதை
42.     நல்லதோர் வீணை
43.    ஜீவா பூங்கா
44.     வதம்
45.     கொட்டாரம் தாலுக்கா திருநெல்வேலி ஜில்லா
46.    கோழி
47.     பல்லு
48.    கங்கா
49.    திசை
50.    கண்ணம்மா பேட்டை
51.      காணத்தவறாதீர்கள்
52.     கந்தர்வன்
53.    கஜன்
54.     காதல் அகதி
55.     சம்மட்டி
56.    போக்கிரி ராஜா
57.     பொய் அழகன்
58.    குத்துப் பாண்டி
59.    100% காதல்
60.    ஷண்முகா
61.      மாற்றம்
62.    மெய்யழகி (பூர்ணா பாலாஜி)
63.    ஃபோர் ஸ்கொயர்
64.    நாலும் தெரிஞ்ச ரெண்டு பேர்
65.    நானும் என் காதலும்
66.    பார்த்த முதல் நாளே
67.    ஊர் சுற்றும் வாலிபன்
68.   சாந்துப் பொட்டு(சிபி)
69.    சிறைச்சாலை முத்துப்பாண்டி
70.    சோளக்காட்டுப் பொம்மை
71.      அன்புள்ள மான் விழியே
72.     ஆதி நாராயணா( கருணாஸ்-மீரா ஜாஸ்மின்)
73.    தறுதல
74.     நாளைய வெற்றி
75.     மன்னவன்
76.    பள்ளிக்கூடம் போகாமலே
77.     ஓடிப்புடி
78.    வெள்ளைக் காகிதம்

’நண்பன்’ படத்தின் “என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்” பாடலின் அதிரடி வெற்றிக்குப் பின்
மேலும் இருபதுக்கும் மேற்பட்ட புதிய படங்கள் ஒப்பந்தமாகியிருக்கின்றன..