முதலமைச்சரானார் தொல்.திருமாவளவன் ..
மாணவர் சக்தி என்பது மின்சக்தியைப் போன்றது என்று அடித்துச் சொல்ல வருகிறது மின்சாரம் திரைப்படம்.மாணவர்கள் பிரச்னையை மையமாக வைத்து மாணவர் சக்தியைப் பின்புலமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.தமிழரசன், பழனி எம்.இலியாஸ் இருவரும் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் 4வது படம் இது. கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செடீநுகிறார். டி.தேவன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் என்.செல்வகுமாரன். அறிமுக நாயகன் யுவராஜ், நாயகி மதுசந்தா, அறிமுக வில்லன் முத்துசாமி, சௌகந்தி, `காதல்’ சுகுமார், பாலாசிங், `கானா’ உலகநாதன், `என்னுயிர் தோழன்’ ரமா, சுஜிபாலா, `நாடோடிகள்’ நாகு, நெல்லை சிவா, கோவை செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இப்படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளார்.“நாட்டில் குற்றவாளிகள் பெருகவும், குற்றங்கள் அதிகரிக்கவும், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் சட்டமே காரணம். குற்றம் செய்தவர்கள் சிறையில்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும். தவறுகள் பெருக அவர்களை வெளியே ஜாமீனில் விடுவதே காரணம். அப்படி வெளியே வந்தவர்கள் செய்யும் அநியாயங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு குற்றம் செய்துவிட்டு வெளியே வந்து மீண்டும் இன்னொரு தப்பு செய்து விட்டு உள்ளே போகிறான். மறுபடியும் வெளியே வருகிறான். தைரியமாகக் குற்றறச் செயல்களில் ஈடுபடுகிறான். மறுபடியும் உள்ளே வெளியே ஆட்டம் தொடர்கிறது. ஒருமுறை குற்றவாளியாக சிறைக்குப் போனவனை ஜாமீனில் வெளியே விடாமல் தடுத்திருக்கலாம்.எனவேதான் ஜாமீனில் வெளியே வருவதைத் தடை செய்ய வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது.இதை ஒரு பரபரப்பான காட்சியாக படத்தில் காட்டியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.
திருமாவளவன் ஒரு கட்சியின் தலைவர். அவரை நடிக்க வைத்த அனுபவம் எப்படி?
“அவர்மீது எனக்கு மதிப்பு உண்டு. என் மீது அவருக்கும் அன்புஉண்டு. அந்த உரிமையில் ஒரு பாடல் எழுதித் தருமாறு அவரிடம் முதலில் கேட்டோம். படத்தின் கதையைக் கேட்டார். பாடல் யார் சம்பந்தப் பட்டது? என்று விசாரித்தார். பின்னர் எழுதிக் கொடுத்தார். அவரது அலுவலகத்திலிருந்து புறப்பட்ட கார் அண்ணாநகர், வேளச்சேரி, அசோக் நகர் என்று நான்கு மணி நேரம் சுற்றியபடியே மீண்டும் அலுவலகம் வந்து சேர்வதற்குள் பாடலை ஓடும் காரிலேயே எழுதி விட்டார். பாடலை முதலில் எழுத வைத்து பிறகுதான் மெட்டமைத்தோம். கேட்டபோது அருமையாக இருந்தது. படத்தில் அந்தப் பாடலை ஒரு முதல்வர் பாத்திரம் மாணவர்களுடன் சேர்ந்து பாடுவதாகக் காட்சி வரும். பிறகு எங்களுக்கு அந்த முதல்வர் பாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. முதல்வர் வேடத்தில் நடிக்க மிகவும் தயங்கினார் அவர். தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பே நடிக்கச் சம்மதித்தார்” என்கிறார் தயாரிப்பாளர் தமிழரசன்.
இயக்கிய அனுபவம் எப்படி என்று இயக்குநரிடம் கேட்டபோது, “அவர் ஒரு கட்சியின் தலைவர். தொண்டர்கள் செல்வாக்கு உள்ளவர். அவரிடம் எப்படி வேலை வாங்குவது? என்று ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. அவரோ `என்னை ஒரு கட்சித் தலைவராகப் பார்க்க வேண்டாம். உங்களுக்கு திருப்தி ஏற்படும் வரையில் என்னிடம் வேலை வாங்குங்கள்’ என்றார். அதன்படியே அவர் 8 நாட்களும் ஒத்துழைப்புக் கொடுத்தார். அவர் தோன்றியிருக்கும் மூன்றாவது படம் இது. அவருக்கு மனதிருப்தி தந்த படமும் இதுதான்” என்றார்.
படத்தில் அவர் தோன்றும் முதல்வர் பாத்திரம் காமராஜர் போல எளிமையாக இருக்க வேண்டும் என்றார். எனவே இதுவரை பேன்ட்-சர்ட் போட்ட திருமாவளவனையே பார்த்திருக்கிறோம். முதன் முதலாக வேஷ்டி-சட்டை போட்டதை இப்படத்தில் பார்க்கப் போகிறார்கள். படப்பிடிப்பு முடிந்து டப்பிங்கிலும் அவர் தந்த ஒத்துழைப்பை மறக்க முடியாது.முதலில் தூய தமிழில் வசனங்களைப் பேசி பதிவானது. அது காட்சிக்கு ஒட்டாமல் போகவே எங்கள் விருப்பப்படி பேச்சுத் தமிழில் பேசிக் கொடுத்தார். அவரை திரைப்படத்துக்கு கவிஞராக அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல. அழுத்தமான பாத்திரத்தில் நடிக்க வைத்ததும் எங்கள் படத்தில்தான் என்பதில் பெருமைப்படுகிறோம்.
எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. சினிமாவில் எப்படி நடிக்க வைக்கப் போறீங்க? என்றவர், என்னை நல்லா நடிக்க வெச்சிருக்கீங்க என்கிற அளவுக்குப் பயன்படுத்தியுள்ளோம் என்றவரிடம்,
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிற படம் என்பதால் வணிக ரீதியிலான பலத்துக்காகவே திருமாவளவனை நடிக்க வைத்தீர்களா? என்றால், “அவரது கேரக்டர் படத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்தது. சாதாரணமாகத் தெரிந்த படம் அவர் நடித்த பிறகு பெரிய படமாகி விட்டது. அவரை வைத்து வியாபாரப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. அன்புக்காக மட்டுமே அவரை நடிக்க வைத்தோம்.திட்டமிட்டு அவரை நடிக்கவைக்கவில்லை. திடீரென்று தோன்றிய எண்ணம்தான் இந்த முடிவு”என்கிறார் தயாரிப்பாளர் தமிழரசன்.
இது அவர் தயாரிக்கும் 4-வது படம்.`மின்சாரம்’ முழுக்க முழுக்க சென்னையிலேயே உருவாகியுள்ள படம். சென்னையில் போக்குவரத்து நெரிசலுள்ள பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம், பாடல் காட்சிகளுக்கும் கூட்டம் என நிறைய பேர் நடித்துள்ளனர். இது போதாதுஎன்று திருமாவளவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது பார்வையாளர் கூட்டம் வேறு அலைமோதியிருக்கிறது.
மின்சாரம் படத்தில் மொத்தம் 4 பாடல்கள். `விழித்தெழு மனிதா.. விழித்தெழு..’ என்ற பாடலை திருமாவளவன் எழுதியிருக்கிறார். படத்தில் அவர் பாட, மாணவர்கள் திரும்பப் பாடுவதாகக் காட்சி வரும். `காசி மேட்டுக் குப்பத்தையே கலக்குறாளே..’ இது இன்னொரு கானா பாடல். இதை கானா உலகநாதன் பாடியிருக்கிறார். இது அவருக்கு இன்னொரு வாடிநக்கை தருமளவுக்கு ஹிட் ஆகும். இதை வானவன் எழுதியிருக்கிறார். இப்பாடல் காட்சிக்காக 12 இலட்ச ரூபாய் செலவில் மார்கெட் செட் போடப்பட்டு படமாகியுள்ளது. கானா உலகநாதனுடன் `நாடோடிகள்’, `மைனா, படங்களில் ஆடிய நடிகை நாகு இணைந்து ஆடியுள்ளார்.`கோலம்மா கோலம்மா..’ இன்னொரு பாடலை எழுதியுள்ளவர் முத்து விஜயன். இப்பாடல் காட்சியில் நாயகன் யுவராஜுடன் சுஜிபாலா ஆடியுள்ளார். `ஆனந்த தீபங்கள் ஆயிரம் ஏற்றுங்கள் வீட்டினிலே..’ என்கிற பாடலை சண்முக சீலன் எழுதியிருக்கிறார்.
அரசியல், மாணவர் சக்தி, ரவுடிகள் அராஜகம், ஈவ் டீசிங் கொடுமை என எல்லாவற்றையும் கலந்து நாட்டு நடப்பை அலசும் படமாக மின்சாரம் உருவாகி இருக்கிறது.
No comments:
Post a Comment