இரா...
இரா என்ற பழந்தமிழ் சொல்லுக்கு இரவு என்று பொருள். ஆவிகள் பேய்கள் போன்ற அமானுஷ்ய சக்திகளுக்கும் இரவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதன் அடிப்படையில் இரா என்ற தலைப்பில் திகில் திரைப்படம் ஒன்றை புதிய பரிமாணத்துடன் தயாரிக்கிறது ஷங்கர் பிரதர்ஸ் என்னும் புதிய திரைப்பட நிறுவனம்.
ஆவிகள் பேய்கள் போன்ற விஷயங்களுக்கு இன்று வரை ஆதாரமில்லை. அப்படிப்பட்ட ஒரு ஆதாரத்தை சேகரிக்கும் முயற்சியில் நகுலன் பொன்னுசாமி என்ற அமானுஷ்ய ஆராய்ச்சியாளர், மூணாறில் உள்ள பிரபல தொழிலதிபரின் பூர்வீக சொத்து இருக்கும் இடத்தில் ஆவிகள் நடமாடுவதாக அறிந்து அங்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ஒரு இரவு முழுவதும் தனியாக தங்கி ஆராயும் அவர் மர்மமான முறையில் இறக்கிறார். அவர் மரணத்தின் மர்மத்தை டெய்ஸி என்ற இளம் டிவி ரிப்போர்ட்டர் ஆராய்ந்து விடை காண முயலுவதே இப்படத்தின் கதை.
Saturday, March 28, 2009
இனி தங்கையாக நடிக்க மாட்டேன்
யாரடி நீ மோகினி படத்தில் நடித்து பிரபலமான சரண்யா மோகன் தற்போது ஈரம் படத்தில் சிந்து மேனனின் தங்கையாக நடிக்கிறார்.இனி தங்கை வேடங்களில் நடிக்க மாட்டாராம். மேலும் ஹீரோவுக்கு பின்னால் மரத்தை சுற்றி டூயட் பாடுவது எனக்கு பிடிக்கவி ல் லை. அதில் உடன்பாடும் இல்லை. எனக்கு கவர்ச்சி நடிப்பு ஒத்துவராது. ஆகவே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். எனது உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை மட்டுமே கேட்கிறேன் அளவுக்கு அதிகமாக சம்பளம் கேட்கவில்லை அதுவெறும் புரளி என்கிறாராம் சரண்யா மோகன்.

வித்தியாசமான "கடற்கரை" இசைவெளியீட்டு விழா
மில்லியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் டிஷ்யும் சோமன் இயக்கும் படம் 'கடற்கரை'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா AVM ஸ்டூடியோ வில் நடைபெற்றது. ஆடியோ CDயை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்திருமா வளவன் வெளியிட திரு நங்கைகள் தலைவர் ப்ரியாபாபு பெற்றுக் கொண்டார். தொல்திருமாவளவன் பேசும் போது பாடல்களில் இளைஞர்களை கவரும் விதத்தில் உள்ளது. வியாபார ரீதியாகவும் இப்படம் வெற்றி பெறவேண்டும் என்று பேசினார். இசை தகட்டை பெற்றுக் கொண்ட திருநங்கை ப்ரியாபாபு திரைப்படங்களில் திருநங்கைகளை அசிங்கப்படுத்துகின்றனர். எங்களுக்கும் மனம் உண்டு வாழ்வுண்டு. நானும் எனது கனவர் பாபுவும் கடந்த 9 வருடங்களாக நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இனியும் எங்களை கொச்சைபடுத்தாதீர்கள் என்று பேசினார்.
Tuesday, March 24, 2009
வேட்டைக்காரன் படத்தில் விஜய் மகன் டான்ஸ்
ஏவி.எம் நிறுவனம் சார்பில் எம்.பாலசுப்ரமணியம், குருநாத்மெய்யப்பன் இருவரும் இணைந்து பெரும் பொருட் செலவில் மிக பிரமாண்டமாக தயரிக்கும் படம் ஏவி.எம்மின் வேட்டைக்காரன். இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியா அனுஷ்கா நடிக்கிறார், இவர்களுடன் ஸ்ரீஹரி, சலீம்கோஷ், சாயாஜி ஷிண்டே, சத்யன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் கதை, எழுதி இயக்குகிறார் பி. பாபு சிவன். இவர் இயக்குநர் தரணியிடம் பல படங்களில் இணை துணை இயக்குநராக பயிற்சிப் பெற்றவர். ஒளிப்பதிவு - கோபிநாத், இசை - விஜய்ஆன்டனி, கலை - மிலன், சண்டைப் பயிற்சி - கனல் கண்ணன், நடனம் ஷோபி. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மார்ச் ஒன்பதாம் தேதி ராஜமுந்திரியில் தொடங்கியது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் நூறு நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடிய ஓப்பனிங் பாடல் காட்சி மிக பிரமாண்டமாக படமானது. இதற்கு ஷோபி நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் காட்சியில் விஜய் மகன் ஜேஸன் சஞ்சை சில காட்சிகளில் நடனம் ஆடியுள்ளார். விஜய் சிறுவயதில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சில படங்களில் நடித்திருக்கிறார். அதே போல அவரது மகனும் சிறுவயதியிலேயே தந்தையின் மூலம் நடிகராகிவிட்டார்.
2008ல் தமிழ்த் திரையுலகம் - நெல்லைஅழகேஷ்
2008-ல் தமிழ்திரையுலகில் நடந்த சில நிகழ்வுகளில் பதிவு இது.
2008-ல் 110 நேரடி தமிழ் படங்களும்,93 மொழி மாற்று படங்களும் என மொத்தம் 203 படங்கள் வெளியாகி உள்ளன. 1931முதல் 2008 வரை தமிழில் சுமார் 4701 நேரடி படங்களும், 1646 டப்பிங் படங்களும் மொத்தம் 6347 படங்கள் வெளியாகி உள்ளன. தணிக்கை செய்யப்பட்டு 210 படங்கள் வெளியாகாமல் இருக்கிறது.
2008ல் வெளியான நேரடித் தமிழ்ப்படங்கள்: 110
பிரிவோம் சந்திப்போம் - ஜனவரி12, பிடிச்சிருக்கு -ஜனவரி 15, வாழ்த்துக்கள் - ஜனவரி15, காளை- ஜனவரி 15, பீமா- ஜனவரி 15, பழனி - ஜனவரி15, இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - பிப்ரவரி 1, தொடக்கம் - பிப்ரவரி 1, அசோகா-பிப்ரவரி 1, தங்கம் -பிப்ரவரி 1, சாது மிரண்டா - பிபரவரி 8, நெஞ்சத்தை கிள்ளாதே - பிப்ரவரி 14, காதல் கடிதம் - பிப்ரவரி 15, அஞ்சாதே - பிப்ரவரி 15, வள்ளுவன் வாசுகி - பிப்ரவரி 15, தூண்டில் - பிப்ரவரி 22, ஃ(அக்கு) . பிப்ரவரி 22, தோட்டா - பிப்ரவரி 29, சில நேரங்களில் - பிப்ரவரி 29, வம்புசண்டை - மார்ச் -1, வெள்ளித்திரை - மார்ச் 7, பொன்மகள் வந்தாள் - மார்ச் 7, எழுதியதாரடி - மார்ச் 7, தீக்குச்சி - மார்ச் 14, வைத்தீஸ்வரன் - 15, சண்டை - மார்ச் 21. இன்பா - மார்ச் 21. சிங்கக்குட்டி- மார்ச் 21, கண்ணும் கண்ணும் - மார்ச் 21, வேதா - மார்ச் 28, தரகு - மார்ச் 28, கட்டுவிரியன் - மார்ச் 28, அழகுநிலையம் - மார்ச் 28, பசும்பொன் தேவர் வரலாறு - ஏப்ரல் 4, விளையாட்டு - ஏப்ரல் 4, யாரடி நீ மோகினி - ஏப்ரல் 5, நேபாளி - ஏப்ரல் 11, தோழா - ஏப்ரல் 11, சந்தோஷ் சுப்ரமணியம் - ஏப்ரல்12, அறை எண் 305ல் கடவுள் - எப்ரல்18, இயக்கம் - ஏப்ரல் 25, வசூல் - ஏப்ரல் 25, மதுரை பொண்ணு சென்னை பையன் - மே1, சக்ரவியூகம் -மே1, குருவி - மே 3, சிலந்தி - மே 8, மலரினும் மெல்லிய - மே 9, அரசாங்கம் - மே 9, காதல் என்றால் என்ன - மே16, பாண்டி -மே 23, காத்தவாராயன் - மே 30, காலைப்பணி - மே 30, தித்திக்கும் இளமை - ஜூன் 13, தசாவதாரம் - ஜூன் 13, ஆயுதம் செய்வோம் - ஜூன் 27, அய்யாவழி - ஜூன் 27, புதுப்பாண்டி - ஜூன் 27, வல்லமை தாராயோ - ஜூன்28, உளியின் ஓசை - ஜூலை 4, சுப்ரமணியுபரம் - ஜூலை 4, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு - ஜூலை4, அழைப்பிதழ் - ஜூலை11, மாணவன் நினைத்தால் - ஜூலை 18, சுட்டபழம் - ஜூலை 25, பத்து பத்து - ஜூலை 25, குசேலன் - ஆகஸ்ட் 1, உன்னை நான் - ஆகஸ்ட் 8, சத்யம் - ஆகஸ்ட்14, ரகசிய சிநேகிதனே - ஆகஸ்ட் 15, நாயகன் - ஆகஸ்ட் 22, ஜெயம்கொண்டான் - ஆகஸ்ட் 29, தாம் தூம் -ஆகஸ்ட் 29, உருகுதே - செப்டம்பர் 5, தனம் - செப்டம்பர் 9, கி.மு. - செப்டம்பர் 9, அலிபாபா - செப்டம்பர் 9, சரோஜா - செப்டம்பர் 9, இனி வரும் காலம் - செப்டம்பர் 9, பொய் சொல்ல போறோம் - செப்டம்பர் 12, முதல் முதல் முதல் வரை - செப்டம்பர் 19, ராமன் தேடிய சீதை - செப்டம்பர் 26, பந்தயம் - செப்டம்பர் 19, காதலில் விழுந்தேன் - செப்டம்பர் 26, சக்கரகட்டி - செப்டம்பர் 26, துரை- அக்டோபர் 1, வேள்வி - அக்டோபர் 3, கத்திக்கப்பல் . அக்டோபர் 9, நேற்று இன்று நாளை , அக்டோபர் 10, பூச்சி - அக்டோபர் 17, ஏகன் - அக்டோபர் 25, சேவல் - அக்டோபர் 27, மேகம் - அக்டோபர், தீயவன் - அக்டோபர் 31, கொடைக்கானல் - நவம்பர் 14, வாரணம் ஆயிரம் - நவம்பர், தெனாவட்டு - அக்டோபர் 21, பூ - அக்டோபர் 28, நடிகை - நவம்பர் 28, மகேஷ், சரண்யா மற்றும் பலர் - நவம்பர் 28, எல்லாம் அவன் செயல் - நவம்பர் 28, சாமிடா - டிசம்பர் 6, பொம்மலாட்டம் - டிசம்பர் 12, சூர்யா - டிசம்பர் 12, சிலம்பாட்டம் - டிசம்பர் 18, புதுசுக் கண்ணா புதுசு . டிசம்பர் 19, திண்டுக்கல் சாரதி - டிசம்பர் 19, திருவண்ணாமலை - டிசம்பர் 19, அபியும் நானும் - டிசம்பர் 19, பஞ்சாமிர்தம் - டிசம்பர் 25, பச்சை நிறமே - டிசம்பர் 27.
இதில் ஆடும் கூத்து, உனக்காக, எழுதியதாரடி, ஃஅக்கு, கண்ணும் கணணும், காதல்கடிதம், திருதிருடா, தீக்குச்சி, தொடக்கம், புதுசு கண்ணா புதுசு, பத்து பத்து, பீமா, பூச்சி, பொம்மலாட்டம், மதுரை பொண்ணு சென்னை பையன், மலரினும் மெல்லிய, ரகசிய சினேகிதனே, வழக்கறிஞர் அர்ச்சனா, வள்ளுவன் வாசுகி, புதுப்பாண்டி, காசிமேடு கோவிந்தன், பட்டைய கிளப்பு ஆகிய 22 படங்கள் முந்தின ஆண்டுகளில் தணிக்கை செய்யப்பட்டவை ஆகும். இதில் பாடல் இல்லாத படம் அசோகா, ஃ அக்கு என இரண்டு படங்கள். மிக நீளமான (5214மீட்டர்) படம் அஞ்சாதே. நீளம்(2310) குறைவான படம் ஃஅக்கு.
2008ல் வெளியான மொழி மாற்று படங்கள் - 93
தெலுங்கிலிருந்து தமிழ் - 17தனிகாட்டுராஜா, கழுகு, காயத்ரி ஐ.பி.எஸ், பவுர்ணமி, ஜில்லா, இந்திரலோக இளவரசன், வெற்றித் திருமகன், மந்த்ரா, பிளாட்பார்ம், நல்ல பொண்ணு கெட்ட பையன், ஸ்டாலின், வழக்கறிஞர் அர்சச்னா, லட்சுமி, திரு.கெளதம் எஸ்.எஸ்.எல்.சி, துளசி, திரு திருடா, தேவா.
மலையாளத்திலிருந்து தமிழ் - 8உனக்காக, சத்யா, இளமான்கள், கொம்பு, பகை, நாகர்கோவில், பந்தயக்கோழி, பொன்னுத்தாய்.கன்னடத்திலிருந்து தமிழ் - 2பிரமாண்டம், காதல் வானிலே
இந்தியிலிருந்து தமிழ் - 6ஜோதா அக்பர், பூதநாதன், ப்ரனாலி, காமசதிலீலாவதி, மல்லிகா காமினி, மாணவ மாணவிகள்
ஆங்கிலத்திலிருநது தமிழ் - 58தி கிங், நெஞ்சில் துணிவிருந்தால், ரோக் அஸாஸின், விடாது காத்து கருப்பு, வேட்டையாடும் வெறியர்கள், குறி, பூலோக புதையல், நியூபோலீஸ் ஸ்டோரி, தங்கதிசை காட்டி, ராம்போ-4 ,மெர்குரிமேன், கொல்லிமலை குமரிகள், இன்டியானா ஜோன்சும் கபால ராஜ்ஜியமும், கிளேடியேட்டர் ரிட்டன்ஸ், கல்லறைகோட்டை, நார்நியா, ரிட்டன்ஸ், இறுதி ஒப்பந்தம், தி பார் பிடன் கிங்டம், எம்.ஐ -4, பேசும் சுட்டி நாய்குட்டிகள், வீரச்சிறுவனும் அதிசயகடல் குதிரையும், ஜாஸ் ரிட்டன்ஸ், வைரத்தைத் தேடி, அமெரிக்கன் சந்திரமுகி, சூப்பர்கேர்ள்-4, கவசமனிதன், நாட்டுக்கோழி, பச்சை மனிதன், இரும்புகோட்டை, மயானபூமி, சவாலே சமாளி, பாதாள அரக்கர்கள், சூறாவளி மனிதன், உதைமாண்டர், கி.மு.10.000, விசித்திரன், பேட்மேன் -2, மம்மி - 3, மிஸ்டுகால், மிஸ்டர் போனஸ், ஹிட்மேன், பாபிலோன் ஏ.டி., நரக மனிதனும் சாத்தான் படைகளும், ஜான்ராம்போ, தங்கமலை அதிசயம், எரிமலை, இரண்டாம் உலகம், இரவு வேட்டை, ருத்ரநாகம், ருத்ரநாகம்-2, குவாண்டாம் ஆஃப் சோலஸ், அதிரடி உளவாளிகள், அதிரடி வீரர்கள், மம்மி மினோடார், மரணபோராட்டம், ஆரண்யகாண்டம், பூலோகபிரளயம், பான்சி, டிரான்ஸ்போர்டர் - 3.
2008-ல்தணிக்கை செய்யப்பட்ட படங்கள் விவரம் : ஆறுபடை, ஆவல், பக்தன், சித்திரபாவை, என்னுள்ளே, இளம்புயல், இரு நதிகள், க, காதல்கதை, குடியரசு, மன்மத ராஜா, நெடுந்தூர ஓட்டம், நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும், நேற்று போல் இன்று இல்லை, புலன் விசாரணை, துணிச்சல், துள்ளும் இள நெஞ்சே, திக்திக், வங்கி, வண்ணத்துப் பூச்சி, வக்ரம், விசாரணை, எங்கராசி நல்ல ராசி, தமிழகம். ஆகிய 24 படங்கள் 2008 -ல் தணிக்கை செய்யப்பட்ட படங்கள் ஆகும்.
200 நாட்கள் ஓடிய படம்: 1யாரடி நீ மோகினி - 200 நாட்கள்150 நாட்கள் ஓடிய படம்: 2குருவி- 150 நாட்கள், நாயகன் - 150 நாட்கள் (5.12.08 அன்று), 100 நாட்கள் ஓடிய படங்கள் - 18சந்தோஷ் சுப்ரமணியம், சுப்ரமணியுபரம், தசாவதாரம், உளியின் ஓசை, தாம்தூம், ஜெயம் கொண்டான், சரோஜா, அஞ்சாதே, பொய் சொல்லப் போறோம், வல்லமைதாராயோ, தோட்டா, காளை, பழனி, பிரிவோம் சந்திப்போம், பாண்டி, காத்தவாராயன், சக்கரக்கட்டி(3.1.09 அன்று 100வது நாள்), சண்டை.2007 ம் ஆண்டு வெளியாகி 2008 ம் ஆண்டிலும் தொடர்ந்து ஓடிய படங்கள் - 9பருத்திவீரன் - 385 நாட்கள், பொல்லதாவன் - 100 நாட்கள், அழகிய தமிழ்மகள் - 100 நாட்கள், வேல் - 100 நாட்கள், மிருகம் - 100 நாட்கள், ஒன்பது ரூபாய் நோட்டு - 100 நாட்கள், பில்லா -100 நாட்கள், மலைக்கோட்டை - 100 நாட்கள், முதன்முதலாய் - 100 நாட்கள்,
அதிக படங்கள்ஹீரோ பரத் - 4 படங்கள்பழனி, நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, சேவல்.நாசர் 12 படங்களும், வடிவேலு 10 படங்கள் ஹீரோயின் 4 படங்கள்நயன்தாரா - யாரடி நீ மோகினி, குசேலன், ஏகன், சத்யம்சினேகா - இன்பா, பாண்டி, பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம் இசை ஸ்ரீகாந்த்தேவா - 14. பழனி, தங்கம், சிலநேரங்களில், தோட்டா, தீக்குச்சி, வேதா, நேபாளி, அரசாங்கம், பாண்டி, காத்தவராயன், ஆயுதம் செய்வோம், தெனாவட்டு, வைத்தீஸ்வரன், திருவண்ணமலை.பாடல் நா.முத்துகுமார்: 30படங்கள், 103 பாடல்கள் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் 4 படங்கள்பி.ஆர்.ஓ மெளனம்ரவி 24 படங்கள் பட விநியோகம் - பிரமிட் சாய்மீரா 11 படங்கள் வாங்கியுள்ளன.சிடி வெளியீடு- ஐங்கரன் 15 படங்கள்
2008ல் அறிமுகமான நாயகர்கள் - 38ஸ்ரீ பாலாஜி- காதல் கடிதம், சத்யா - வள்ளுவன் வாசுகி, சிவாஜி - சிங்கக்குட்டி, ராம் - கட்டுவிரியன், சஞ்சய் - தரகு, ரிஷிகுமார்- இயக்கம், ஹேமந்த் குமார்- வசூல், பங்கஜ்குமார் - மதுரை பொண்ணு சென்னை பையன், ரதிஷ்-அழைப்பிதழ், பி.கே. ராஜ்மோகன்- அழைப்பிதழ், வீரா-காதல் எள்றால் என்ன, தினேஷ்-தித்திக்கும் இளமை, பிரனவ்-தித்திக்கும் இளமை, ஜேஜே-காலைப்பனி, ராஜா-அய்யாவழி, சஞ்சய்-அய்யாவழி, சசிகுமார்-சுப்ரமணியபுரம், ரித்திக்-மாணவன் நினைத்தால், வினோத்-உன்னைநான், ஹசன்-கி.மு, கிருஷ்ணா-அலிபாபா, சி.பி.தய்ஜித்-முதல் முதல் முதல் வரை, சாந்தனு-சக்ரக்கட்டி, அனுப்குமார்-கத்திக்கப்பல், எழில்வேந்தன்-விளையாட்டு, ஜெரோவதன்-வேதா, சண்முகராஜன்-உருகுதே, விஜயராஜ்-ரகசியசினேகிதனே, அஜய்-ஃ(அக்கு), உதய்-தீயவன், ரஞ்சன்-தீயவன், அஜ்மல்-அஞ்சாதே, சஞ்சித்- பத்து பத்து. விஜய் சிரஞ்சீவி - சூர்யா, கணேஷ்வெங்கட்ராம் - அபியும் நானும். திலக் - கொடைக்கானல்
2008ல் அறிமுகமான நாயகிகள் - 46விசாகா - பிடிச்சிருக்கு, காஜல் அகர்வால்- பழனி, ருக்மணி விஜயகுமார் - பொம்மலாட்டம், யாமினி - இந்திரலோகத்தில் நா. அழகப்பன், பூஜாபாரதி - அசோகா, அனுஸ்ரீ - அசோகா, அனிஷா - காதல் கடிதம், மேனகை - தீக்குச்சி, ராகிணி- சண்டை, டிம்பிள்- தரகு, ஜெனிஃபர் - தோழா, சாகித்யா - தோழா, லக்ஷனா - தோழா, தேஜாமை - மதுரை பொண்ணு சென்னை பையன், நவ்நீத்கவூர் - அரசாங்கம், ஷெரீல் பரிண்டோ - அரசாங்கம், அல்தாரா - தித்திக்கும் இளமை, நிஷா - தித்திக்கும் இளமை, மல்லிகா ஷொராவாத்- தசாவதாராம், பூர்ணா - முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு, சுவாதி- சுப்ரமணியபுரம், சோனா- அழைப்பிதழ், நாஷ் - உன்னைநான், லேகா வாஷிங்டன் - ஜெயம் கொண்டான், கங்கணா ரனாவத் - தாம்தூம், சாரிகா -கி.மு, ஜனனி - அலிபாபா, வேகா- சரோஜா. பியா - பொய்சொல்லபோறோம், ஏகன், ரம்யாநம்பீசன் - ராமன் தேடிய சீதை, சுனைனா - காதலில் விழுந்தேன், ஹாசினி - வேள்வி, பூனம் பஜ்வா - சேவல், பார்வதி - பூ, தனுஷ்யா - சாமிடா, பாமா - எல்லாம் அவன் செயல், ஷானாகான் - சிலம்பாட்டம், (ஈ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்), விதிஷா- காத்தவராயன், ராகிராஜூ- மேகம், சரிதயாயாதவ் - மேகம், ஷமிராரெட்டி - வாரணம் ஆயிரம், பர்வீன்கபூர் - இனி வரும் காலம், ஜெயந்தி - உருகுதே, இஷிதா- சக்ரக்கட்டி, மனிஷா- எழுதியதாரடி, அகிலா - எழுதியதாரடி.கேரக்டர் ரோலில் நடித்து கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்கள்: 7நகுலன் - காதலில்விழந்தேன், செம்பி- சாமிடா, வின்சென்ட் அசோகன் - சில நேரங்களில், ஆர்.கே. - எல்லாம் அவன் செயல்.ஸ்வேதா - வள்ளுவன் வாசுகி, மேகா நாயர் - தங்கம், சரண்யா - விளையாட்டு.
2008 ல் தமிழில் அறிமுகமான இயக்குநர்கள்- 52கனகு - பிடிச்சிருக்கு, ஆர்.முத்துகுமார் - தொடக்கம், முகேஷ் - காதல் கடிதம், ஜெயராஜ் - சில நேரங்களில், ஆர்,கே. வித்யாதரன் - வைத்தீஸ்வரன், எஸ்.டி. வேந்தன்- இன்பா, ஜி.மாரிமுத்து - கண்ணும் கண்ணும், ஆர். நித்யகுமார் - வேதா, கலாநிதி - தரகு, எழில்வேந்தன் - விளையாட்டு, மித்ரன் ஆர். ஜவகர் - யாரடி நீ மோகினி, என். சுந்தரேஸ்வரன் - தோழா, ஏ.சி. ராஜசேகரன் - மதுரை பொண்ணு சென்னை பையன், சிலந்தி - ஆதி, பி. எஸ் செல்வராஜ் - மலரினம் மெல்லிய, சந்திரமோகன் - தித்திக்கும் இளமை, ராஜேஷ்- காலைப்பனி, சலங்கைதுரை - காத்தவராயன், மதுமிதா - வல்லமைதாராயோ, இளவேனில் -உளியின் ஓசை, சசிகுமார் - சுப்ரமணியபுரம், சத்யம் - பத்துபத்து, ஏ.ராஜசேகர் - சத்யம், ஆர்.கண்ணன் - ஜெயம் கொண்டான், ஜி.சிவா - தனம், நீலன் கே.சேகர்- அலிபாபா, கிருஷ்ணா சேஷாத்ரி கோமடம் - முதல் முதல் முதல் வரை, கலாபிரபு - சக்கரகட்டி, பி.வி.பிரசாத் - காதலில் விழுந்தேன், ஜீன்ஸ் - வேள்வி, லட்சமிகாந்த் சென்னா - நேற்று இன்று நாளை, ராஜூ சுந்தராம் - ஏகன், ஜீவரத்னம் - மேகம், பி.கதிர்- தீயவன், வி.வி. கதிர் - தெனாவட்டு, வி.சி.வடிவுடையான் - சாமிடா, ஜாகுவார்தங்கம் - சூர்யா, பி.வி.ரவி - மகேஷ் சரண்யா மற்றும் பலர், ஆப்ரகாம்லிங்கன் - பசும் பொன்தேவர் வரலாறு, மாமணி- ஃ(அக்கு), திணேஷ் செல்வராஜ் - கத்திக்கப்பல், பி.அஸ்லாம் - உருகுதே, சிபிசந்தர் - இனிவரும் காலம், எம்.வி.வேலு - பூச்சி, ஏ.எல்,ராஜா - தீக்குச்சி, கார்க்கி - பச்சைநிறமே, ராஜூ ஈஸ்வரன் - பஞ்சாமிர்தம், இ.எம். ராம்மூர்த்தி - பொன்மகள் வந்தாள், பி.கே. ராஜ்மோகன் - அழைப்பிதழ், சத்யராகவேந்திரா - எழுதியதாரடி, எஸ்.சரவணன் - சிலம்பாட்டம்.
2008ல் படங்கள் தயாரித்த புதிய நிறுவனங்கள் - கம்பெனி புரொடக்ஷன்ஸ் - சுப்ரமணியபுரம், கிரியெட்டிவ் டாக்கீஸ் - சாமிடா, அபிராமிமெகாமால் - பஞ்சாமிர்தம், நவநீதம் பிலிம்ஸ் - புதுசுகண்ணா புதுசு, ஸ்ரீ சொர்ணலட்சுமி மூவிஸ் - கொடைக்கானல், தெற்கத்தி கலைக்கூடம் - பொம்மலாட்டம், நேசகி சினிமாஸ் - பூ, ஜே.வி.ஆர் மூவிமேக்கர் - சூர்யா, ஜின்னா கிரியேஷன்ஸ் - சேவல், கஜா நனா மூவிஸ் - கத்திக்கப்பல், திரிகஜா பிலிம் இண்டர்நேஷனல் - வல்லமை தாராயோ, ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் - உளியின் ஓசை, அனீஷ் கிரியேஷன்ஸ் - உருகுதே, ஈஸ்வர் கிரியேஷன்ஸ் - தீயவன், திவ்யதர்ஷினி புரோடக்ஷன்ஸ் - மலரினும் மெல்லிய, வேலுதேவர் பிரிம்ஸ் - மதுரை பொண்ணு சென்னை பையன், அக்ஷயா பிக்சர்ஸ் - காதல் என்றால் என்ன , சில்வர் ஜூபிலி பிலிம்ஸ் - காத்தவராயன், நரேஷ்நாகா பிக்சர்ஸ் - தித்திக்கும் இளமை, அருள்மூவிஸ் - மாணவன் நினைத்தால், ஆஸ்ப்ரோபிலிம்ஸ் - விளையாட்டு, அரோவனா பிலிம்ஸ் - தோழா, கனெக்ட் பிலிம் மீடியா - வேதா, தமிழ் ஸ்கிரின் - சிங்கக்குட்டி, எஸ்.பி.ஆர். எண்டர் டெயிண்ட்மெண்ட் - நேற்று இன்று நாளை, ரேவதி :மவி மேக்கர்ஸ் - ரகசிய சினேகிதனே, நந்திமேடு செல்லியம்மன் மூவிஸ் - தனம், ஆன்லைஃப்நெட்வொர்க் - ஃ (அக்கு), யாக்கோ பிலிம்ஸ் - கி.மு., பசும்பொன் பிலிம்ஸ் - காலைப்பனி, விஜயேந்திரா புரொடக்ஷன்ஸ் - தொடக்கம், கே.ஆர்.கே.சினி கம்பைன்ஸ் - தரகு, ஞானம் பிலிம்ஸ் - பிரிவோம் சந்திப்போம், மைக்ரோ மெக்ரோ பிலிம்ஸ் - காதல் கடிதம், நியூலைட் புரொடக்ஷன்ஸ் - சில நேரங்களில், பப்பிலியன் கம்னியூகேஷன்ஸ் - பசும்பொன்தேவர் வரலாறு, மீடியா ஒன் குளோபல் எண்டர் டெயின்மெண்ட் - தாம்தூம், திருமலை ஸ்ரீ பாலாஜி பிலிம்ஸ் - பொன்மகள் வந்தாள், இந்தியன் டிரீம் மேக்கர்ஸ் - பத்து பத்து, ரத்னமாலா மூவிஸ் - இன்பா, அல்காபிலிம் கார்பரேஷன் - சாதுமிரண்டா, ஸ்டார் மூவி மேக்கர்ஸ் - தீக்குச்சி, திஃபோர்த் டைமென்ஷன் அகாடமி - வேள்வி, ஸ்ரீவெங்கடாசலபதி பிலிம் - அழைப்பிதழ், ஷக்யா செல்லுலாய்ட்ஸ் - நாயகன், மீடியாண்ட்டார்லாக் அண்ட் குட்வின் மூவிஸ் - தூண்டில், ரெட்ஜெயன்ட் மூவிஸ் - குருவி, கமலம் கலைக்கூடம் - வள்ளுவன் வாசுகி,
2008 ல் அறிமுகமான இசையமைப்பாளர்கள் - 29மனுரமேஷ் - பிடிச்சிருக்கு, தீபக்தேவ் - சாதுமிரண்டா, அபிஷேக் ரே - தூண்டில், பிரசன்னாசேகர் - சிங்கக்குட்டி, பாலாஜி- இன்பா, கலைப்புலி ஜிசேகரன் - கட்டுவிரியன், விஜயசங்கர் - வசூல், கண்மணிராஜா -மதுரை பொண்ணு சென்னை பையன், கார்த்திக் - சிலந்தி, பாரதி .கே- காதல் என்றால் என்ன, கே.மணிஷ்- தித்திக்கும் இளமை, பசுவதி சிவநேசன் - அய்யாவழி, சதிஷ் ராமலிங்கம் - காலைப்பனி, ஹிமேஷ் ரேஷ்மியா - தசாவதாரம், ஜேம்ஸ்வசந்தன் - சுப்ரமணியபுரம், வீ.தஷி -மாணவன் நினைத்தால், எல்.வி. கணேசன்- பத்துபத்து, ஜோய் அருள்ராஜ்- உன்னைநான், மரியாமனோகர்- நாயகன், இ.எல்.இந்திரஜித் - கி.மு, எம்.ஜி. ஸ்ரீ குமார் -பொய் சொல்லப் போறோம், அனில் - நேற்று இன்று நாளை, ரவிப்பிரியன் - மேகம், எஸ்.எஸ். குமரன் - பூ, ஸ்ரீசாய் - கத்திக்கப்பல், ஸ்ரீராம் - ஃ(அக்கு), ஹித்தேஷ் - அழைப்பிதழ், ஸ்ரீமகான் - எழுதியதாரடி, ஹரி - பரணி - பசும்பொன் தேவர் வரலாறு.
அறிமுக பாடலாசியர்கள் - 11திரவியம் - வைத்தீஸ்வரன், விஜய் ஸாகர் - வேதா, தயாரிப்பாளர் வாசு பாஸ்கர் - வேதா, எஸ். கோகிலா- வேதா, தங்க செந்தில் குமார் - வேதா, பிச்சுமணி - முதல் முதல் முதல் வரை, ஞா.ராபர்ட்- லூசிம்பாரா (பந்தயம்), யோசி -நாயகன், க.செழியன் - நாயகன், ரமேஷ் - சந்தனவேட்டைக்காரன்(சிலந்தி), ஜெயாரவி - தீக்குச்சி.
2008 ல் அறிமுகமான புதிய பாடகர்கள் - 25சயேளோரா பிலிப் - எதற்காக என்னை (வம்புசண்டை), ஜோட்ஷனா - தாழ்திறவாய் (வம்புசண்டை), நடிகர் ரகுவரன் - எதுதான் முடியாது (தொடக்கம்), நடிகர் தென்னவன் - சிவப்பாய் தொடங்கிய (வேள்வி) நடிகர் சித்தாத் - சந்தோஷ் சுப்ரமணியம், செளமியாராவ் - பீமா, நிகில்மேத்யூ - பீமா, பேலஷெண்டே - சக்ரவியூகம் , கவிஞர் சினேகன் - சக்ரவியூகம், ரீட்டா - ஒரு நாளைக்குள் (யாரடி நீ மோகினி), ஜெயமூர்த்தி - அறைஎண் 305ல் கடவுள், சுனிதி செளகான- ஹேப்பி நியூ இயர் (குருவி), சங்கீத்ஹல்திபூர் - டண்டானார்ணா(குருவி), பலானது - எஸ்.ராஜலட்சுமி (குருவி), அஷித் - வாவா மாப்பிள்ளை (தோட்டா), ஃபாரத் பி வாந்திவாலா - சிங்கக்குட்டி, சையனோரோ -சாதுமிரண்டா, சுசித்சுரேஸ்ன் - சாதுமிரண்டா, ஜோத்ஸ்னா - சாதுமிரண்டா, ஆதர்ஸ் - சாமிடா, டைரக்டர் வடிவுடையான் - சாமிடா, ஷாம்.பி.கீர்த்தன் - சாமிடா, ஜோ -சாமிடா, கிறிஸ்டோபர் - பந்தயம். பி.சி.சுபீஸ் - மாணவன் நினைத்தால், மிஷ்கின் - அஞ்சாதே
இயக்குநர்கள் எழுதிய பாடல்கள்: 15ரவிமரியா - அக்டோபர் மாதத்தில் (சண்டை), ஷக்திசிதம்பரம் - மதுரைக்கார பொண்ணு (சண்டை), ஆர்,கே.வித்யாகரன்- கண்ளும் தூங்காதே(வைத்தீஸ்வரன்), ஆர்.நித்தியகுமார் - (வேதா), ஜீன்ஸ் - வேள்வி (சிவப்பாய் தொடங்கிய), கிருஷ்ணன் சேஷத்ரி கோமடம் - எதுவுமே முக்கியமில்லை (முதல் முதல் முதல் வரை), எஸ்,எழில்வேந்தன் சிக்குமா சிக்காதா - (விளையாட்டு), சஞ்சய்ராம் - இயக்கம் 4 பாடல்கள், பேரரசு - குத்துமதிப்பா (பாண்டி), ஆதி - அதுகாதல் மின்சாரமா (சிலந்தி), தம்பிராமையா - இந்திரலோகத்தில் நா.அழகப்பன் (2 பாடல்கள்), பி.வி.பிரசாத் - நாக்க முக்க (காதலில் விழுந்தேன்), சிவசண்முகம் - பரத்திகாடு பத்திக்கிச்சு (திண்டுக்கல் சாரதி), வி.சி.வடிவுடையான் - சாமிடா (முழுப்பாடல்கள்), ஞானமொழி - மாணவன் நினைத்தால்.
ரீமிக்ஸ் பாடல்கள்:மாசிமாசம் ஆளான பொண்ணு - பாண்டி, ராஜா ராஜாதிராஜா - துரை, வாடி என் கப்பக்கிழங்கே - சண்டை, சுராங்கனி - பந்தயம், சின்னமாமியே - பந்தயம்( இலங்கை பைலா பாடல்கள்), ஆட்டமா தேரோட்டமா - சிங்கக்குட்டி, வச்சிக்கவா உன்னைமட்டும் -சிலம்பாட்டம், சொல்லுறேன் சொல்லுறேன் - தங்கம், (வெளிவராத காவலன் படப்பாடல்), தோழா - ஒரு நாயகன் உதயமாகிறான், பாலகாட்டு பக்கத்திலே - யாரடி நீ மோகினி, லோஜா மலரே ராஜகுமாரி - நடிகை.
2008ல் அறிமுகமான ஒளிப்பதிவாளர்கள் - 24த.வீ. இராமேஸ்வரன் - பிடிச்சிருக்கு, கே. குணசேகரன்- மகேஷ் சரண்யா மற்றும் பலர், எஸ்.ஜே. ஸ்டார் - வேள்வி, இளவரசு கதா கணேசன் - கி.மு., ஆர்.பிரகாஷ் - இனி வரம் காலம், வி.லெஷ்மிபதி - துரை, அபுஷா - நாயகன், வி.விஜய்கிருஷ்ணன் - பச்சைநிறமே, ப்ரமோத்வர்மா - பஞ்சாமிர்தம், பி.தனா - தோழா, துரை கே. வெங்கட் - அழைப்பிதழ், டி.கண்ணன் - விளையாட்டு, பிரதாப் வி.குமார் - சாது மிரண்டா, ராஜேஷ் - வள்ளுவன் வாசுகி, சிட்டிபாபு - ஃ(அக்கு), வி.ஆதித்தியா, ஏ.வேல்முருகன்- தொடக்கம், செல்வகணேஷ்- மேகம், உதயகுமார் - பொன்மகள் வந்தாள், ஸ்ரீஷியாம் - சுட்டபழம், ஜீவாசங்கர் - பசும்பொன்தேவர் வரலாறு, ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் - பந்தயம், சஞ்சய் நிவாஸ் - தித்திக்கும் இளமை, சாய்திரிலோக் - இன்பா, சீனிவாசரெட்டி - சாமிடா,அறிமுகமான மக்கள் தொடர்பாளர்கள்: 2 ஏ.ஜான் - தூண்டில், செல்வரகு - தோழா
இரட்டை வேடம் -5 வடிவேலு - இந்திரலோகத்தில் நா. அழகப்பன், சிம்பு- சிலம்பாட்டம், அர்ஜூன் - திருவண்ணாமலை, சூர்யா - வாரணம் ஆயிரம், மாளவிகா - கட்டுவிரியன்
2008 ல் திருமணம் செய்து கொண்டவர்கள்:நடிகர்கள் சிபிராஜ் - ரேவதி, எஸ். மணிகண்ட பிரபு - பிரியார்ஷினி(உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஹீரோ நடிகர் செந்தில் மகன்), கோபி, முன்னா, நடிகைகள் கனிகா- ராதாகிருஷ்ணன்(நடிகை ஜெயஸ்ரீ தம்பி) , கோபிகா- டாக்டர் அகிலேஷ், அருணாதேவி - கே.ஆர். ஆனந்தன்,மகேஷ்வரி - ஜெய் கிருஷ்ணா,விந்தயா - கோபி(பானுப்பிரியா தம்பி), ஷிரேயாரெட்டி-விக்ரம் கிருஷ்ணா , ரூபஸ்ரீ- தினேஷ், விவேகா, யுக்தா முகி, அனு, டிங்கி, பாவனா, அம்முவாகி நான் பாரதி (ரகசிய திருமணம்)இயக்குனர்கள்: ஏ.ஆர்.புவனாராஜா- தனலட்சுமி, கிருஷ்ணா - பூர்ணிமா, திருமலை - நதியா, மதுமிதாஇசையமைப்பாளர்: டி. இமான்- மோனிகா, பகவதி சிவநேசன் - சாருமதி, பாடலாசிரியர்: பாடகி மகதி - ஸ்ரீகுமார்(பல் மருத்துவர்), யுகபாரதி.
2008ல் மறைந்தவர்கள்:நடிகர் பாண்டியன், பூர்ணம் விஸ்வநாதன், கி,ஜே.ரவி(ஒளிப்பதிவாளர்), குன்னக்குடி வைத்தியநாதன், டி.பி.முத்துலட்சுமி,(பழம் பெரும் நகைச்சுவை நடிகை), டைரக்டர் ஸ்ரீதர், சுஜாதா (எழுத்தாளர்), தெலுங்கு நடிகர் சோபன்பாபு, டைரக்டர் ஜீவா, ரகுவரன், குணால் (தற்கொலை செய்து கொண்டார்), வசன கர்த்தா பிரசன்னகுமார், தயாரிப்பாளர் அவினாசிமணி (பாண்டியராஜன் மாமனார்), ஆடியோ பொறியாளர் ஸ்ரீதர், எம்.என்.நம்பியார், கோகுலகிருஷ்ணா, (இயக்குநர் - வசனகர்த்தா), நடிகை தேனி குஞ்சரம்மாள்.
உலகப் படவிழா"காஞ்சிவரம்" டொரெண்டோ பட விழாவில் பங்கு கொண்டது.கோவாவில் நடைபெற்ற உலக படவிழாவில் காஞ்சிவரம் படம் திரையிடப்பட்டது.கேன்ஸ் உலக பட விழாவில் பில்லா திரையிடப்பட்டது.இன்கோ சென்டர் - பெண் இயக்குனர்கள் பட விழா - சாரதா ராமனாதன்- ஜானகி வெங்கட்ராமன் ரேவதி- சுஹாசினி ஆகியோரின் படங்கள் திரையிடப்பட்டனபர்லின் படவிழாவில் பருத்திவீரன் படத்தை இயக்கிய அமீர்க்கு சிறந்த இயக்குநர் விருது.2008 -ல் உலகப் பட விழாவில் இந்திய பமனாரமாவில் காஞ்சிவரம், கல்லூரி, பில்லா, முதல் முதல் முதல் வரை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன
2008ல் திரையுலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
சுமார் ஆயிரத்து இருநூறு படங்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ள டி.எம். செளந்தராஜனுக்கு அவரது கலைச்சேலையை பாராட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்டமான பராரட்டு வழா நடத்தினார். மு.க.அழகிரி. விழாவின் முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு மு,க,அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம்.எஸ்க்கு ரூ.5 லட்சம் பொற்கிழியும் பி.சுசீலாவுக்கு ரூ.3 லட்சம் பொற்கிழியும் வழங்கினார்.இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் கோரியும் நடிகர் நடிகையர் (நவம்பர் 1) சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.இயக்குனர் பாராதிராஜா தலைமையில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய கண்டன பேரணி நடைபெற்றது.தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மெளனத்தின் சார்பில் 5.11.08 அன்று உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள்.சின்னத்திரை நடிகர் நடிகைகள் 9.11.08 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இலங்கைத்தமிழர் நலன் காக்க ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி, கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் மதுரை மத்திய சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்னர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து 300 உதவி இயக்குனர்கள் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் ஆர்பாட்டம் செய்தனர். மேலும் தமிழ் திரை எழுத்ததாளர்கள் சங்கம் சார்பாக விசு, பிறைசூடன், விசி.குகநாதன் மற்றும் பலர் ஆட்சேபம் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர்.இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் பெருவாரியாக தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர்.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் திண்டுக்கல்லில் இயக்குநர் சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டார் (14.12.08)தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ராமநாராயணன் தலமையிலான அணி வெற்றி பெற்றது.சர்வம் படத்தின்சூட்டிங்கிற்காக 10 மாடி கட்டிடத்தில் அரங்கம் அமைக்க செயற்கை லிப்ட் அமைந்திருந்தனர். அது அறுந்து வழுந்ததில் 2 பேர் பலியானர்கள்.ராமர் வேடம் போட்ட நடிகர் சிறுநீர் கழிப்பது போன்று "வணக்கம்மா" விளம்பரத்தில் படம் வெளிவந்ததை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதில்பட பூஜை கேன்சலானது. அதனை தொடர்ந்து படத்தில் அந்த காட்டிசிகள் இருக்காது மாற்றி எடுக்கப்படும் என பட டைரக்டர் அறிவித்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் "குரு" படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருது பெற்றார். தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவிலும் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்.சென்னையில் நடந்த 55வது பிலிம் பேர் வருது விழாவில் "பருத்திவீரன்" படத்திற்கு 6 பிலிம் பேர் விருதுகள் கிடைத்தது.தமிழ் பட உலகல் முதல் முறையாக ஒரே நாளில் 10 படங்களுக்கு பூஜை நடந்தது. இந்த தொடக்க விழா பூஜையை பிரமிட் சாய் மீரா நிறுவனம் நடத்தியது.கலைவாணர் என்.எஸ்கிருஷ்ணன் நூற்றாண்டு பிழா 23.11.08 அன்று சென்னையில் நடைபெற்றது.காளை" படத்தின் இடைவெளைக்கு முந்தைய கதை புரியவில்லை என பரவலாக பேசப்பட்டதை யொட்டி படத்தின் ப்ளாஷ்பேக் காட்சி முன்னதாகவும் சிம்பு லில்லனை பழிவாங்க சென்னைக்கு வரும் காட்சிகள் பின்னதாகவும் மாற்றப்பட்டது.பின்னணி பாடகி ஆஷா பேன்ஸ்லே, பின்னணி பாடகி பி,சுசிலா இருவரும் பத்மபூஷன விருதும் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பத்மஸ்ரீ விருதும் பெற்றனர்.சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் "காஞ்சிவரம்" "கல்லூரி, முதல்முதல் முதல் வரை", "பில்லா" ஆகய நான்கு தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.குசேலன்" படத்தில் நகைச்சுவை காட்சியில் தங்களை கேலி செய்ததாக எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முடிதிருத்தம் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் டைரக்டர் பி.வாசுவை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தவறாக காட்டவில்லை என விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டார். டைரக்டர் பி.வாசு."குசேலன்" படத்தில் ரஜினியும், ஆர்.சுந்தர்ராஜனும் அரசியல் பற்றி பேசும் வசனக்காட்சியை நீக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் கேட்டு கொண்டதின் பேரில் பின்பு அந்த வசனக் காட்சி நீக்கப்பட்டது.காதலித்து ரகசிய திருமணம் செய்து தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நடிகர் ரகுவண்ணன் (டைரக்டர் நடிகர் மணிவண்ணன் மகன்) மீது பரபரப்பு புகார் கூறி புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார் உதவி இயக்குனர் ஸ்டெபி. மதுவில் போதை கலந்து கொடுத்து நெருக்கமாக இருப்பது போல் போட்டோ எடுத்துள்ளார் என ரகுவண்ணன் வாக்கு மூலம் கொடுத்தார். தன்னை பற்றி தவறாக பேசிய டைரக்டர் சீமான் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என்று அறிவித்தார். ஸ்டெபி.இந்த பரபரப்பு சில நாட்களில் அடங்கி போனது.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்ட கன்னட சமூக விரோதிகளை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.பழம் பெரும் நடிகை சரோஜா தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ப்ரியாமணிக்கு அகில இந்திய அளவில் சிறந்த நடிகைகளை விருதும் (பருத்திவீரன்) வழங்கப்பட்து. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருதை வழங்கினார்.பெர்வின் சர்வேதச திரைப்படவிழாவில் சிறப்பு விருதுபெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த "பருத்திவீரன்" பட இயக்குநர் அமீருக்கு சினிமா பிரஸ்கிளப் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது."பஞ்சாமிர்தம்" படத்தின் இசை வெளியிட்டு விழவில் "பஞ்சாமிர்தம்" பாடல்களை கொண்டு நடன போட்டி நடத்தினர். அதில் தமிழ் நாட்டில் உள்ள 70 பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் மூன்று பள்ளிகளுக்கு முறையே 1.5லட்சம், 1லட்சம், 75 ஆயிரம் என பரிசுகளும் கேடயங்களும் கனிமொழி எம்.பி.வழங்கினார்.இயக்குனர்கள் சங்கதேர்தலில் 363 ஓட்டு வித்தியாசத்தில் இயக்குநர் பாரதிராஜா வெற்றிபெற்றார்.2008ம் ஆண்டில் இணையதளத்தில் அதிகமாக தேடபட்ட நடிகைகளின் பெயர் பட்டியலை கூகுல் இணையதளம் வெளியிட்டது. இதில் நமீதா 3வது இடத்தில் இடம் பிடித்திருந்தார்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா - சுஜாயா, நடிகர் மனோஜ், கே.ஜெயன் -நடிகை ஊர்வசி, நடிகை மீராவாசுதேவன், விஷால் ஆகியோர் விவகாரத்து செய்து கொண்டனர். இந்த மூன்று ஜோடிகளும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது."தசாவதாரம்"படத்தில் கமலஹாசன், ரங்கராஜ நம்பி, கோவிந்த்ராமசாமி அவ்தார்சிங், பல்ராம்நாயுடு, கிறிஸ்டியன் ஃபிளாட்சர் ஷின்கென்நரஹாசி திரசிடெண்ட் ஜார்ஜ் புஷ், விக்சென்ட் பூவராகன், கிருஷ்ணவேணி பாட்டி, கலிஃபுல்லா கான் என பத்து வேடங்களில் நடித்து பிரமிக்க வைத்தார்.விஜய் தனது 35வது பிறந்தநாள் விழாவில் ரசிகர் மன்றக் கொடியை வெளியட்டார்.திரைப்படபத்திரிகையாளர் சங்கம் 2007 ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து திரைப்பட விமர்சகர் விருது வழங்கி கலைஞர்களை கெளரவித்தது.இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான ஜீ தொலைக்காட்சி குழுமம் தமிழில் ஜீசேனலை தொடங்கியது.தென்னிந்திய திரைப்படத் பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2008 -09 க்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.டிஜிட்டல் திரைப்படங்களுக்கு அரசு சலுகை அளிக்க வேண்டும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்."தசாவதாரம்" ஆடியோ வெளியீட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கமல்ஹாசன், ஜாக்கிசான், மம்முட்டி, அமிதாப்பச்சன் மற்றும் பலர் கலந்து கொண்ணடனர்.அனாதை குழந்தைகளுக்காக "குசேலன்" சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.குசேலன்" திரைப்படத்தை திரையிட மறுத்த கன்னடர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டார்.தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக பாரதிராஜா மற்றும் செயலாளராக ஆர்.கே.செல்வமணி ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.சிறந்த மெகாத் தொடருக்கான முதல் பரிசு ராடன் நிறுவனத்தின் செல்வி தொடருக்கு கிடைத்தது , அதனை ராதிகா சரத்குமார் பெற்றுக்கொண்டார். அவருக்கு ரூ.2 வட்சம் ரொக்கமும், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.சிறந்த தெலுங்கு திரைப்பட; கலைஞர்களுக்காக ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் நந்தி விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது. இதில் சினேகாவுக்கு "ராதாகோபலம்" படத்தில்நடித்தற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருது (2007) கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு த்ரிஷாவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது.புதுவையில் நடைபெற்ற 23வது இந்திய திரைப்பட விழா விழாவில் பெரியார் பட இயக்குநர் ஞான ராஜசேகரனுக்கு விருது வழங்கப்பட்டது.விழாவில் "பெரியார்", "அம்முவாகிய" நான் படமும் "கதபறையும் போள்" மலையாள படமும், "தாம்தூம்" இந்தி படமும் "அனுராகம்" பெங்காலி படமும் திரையிடப்பட்டது.முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவில் மல்லிகா ஷெராவத் குட்டை பாவாடை அணிந்த வந்து பரபரப்பை உண்டாக்கினார். இந்து மக்கள் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதே போல் முதல் அமைச்சர் கலந்து கொண்ட சிவாஜி பட விழாவில் ஸ்ரேயா கவர்ச்சி உடையணிந்து வந்து சலசலப்பை உண்டு பண்ணினார். இந்த ஆபாச உடைக்கு கண்டனம் தெரிவித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. இந்த தவறுக்காக ஸ்ரேயா தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த ஆபாச உடை விவாகாரத்தை வழக்கு பதிவு செய்ய முடியாது என போலீசார் தெரிவித்து விட்டனர்.நடிகர் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்டதையொட்டி போலீசார் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.சிலந்தி படம் எச்.டி. பார்மெட்டில் அதாவது டிஜிட்டல் படமாக தயாராகி பிலிமுக்கு மாற்றாமல் அதாவது லேப் பக்கமே போகாமல் கியூப் சிஸ்டத்தில் தியைரங்குகளில் திரையிடப்பட்ட முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இரண்டு வாரம் கழித்து பிலிம்க்கு மாற்றப்பட்டு வெளியானது. இப்படம். பலருக்கு நம்பிக்கையும் ஊக்கம் கொடுத்ததன் விளைவு இன்று டிஜிட்டல் பார்மட்டில் பல படங்கள் உருவாகி வருகிறது.கலை நிகழ்ச்சி நடத்தியதில் முறைகேடு நடந்ததாக சினிமா லைட்மேன் சங்க முன்னாள் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.மு.க.முத்து மகன் அறிவுமதி "பெருமாள்" படத்திற்காக "காதல் வைபோகமே" என்ற பாடலை சொந்த குரலில் பாடினார்.ஆங்கிலம் இந்தி விளம்பர படங்களக்கு விருது வழங்கப்படுவதை பேல தமிழ் விளம்பர படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மெட்ராஸ் அட்வர்டைசிஸ் கிளப் வழங்கியது.பாடல்கள் வெளியிடுவதற்கு முன்பாக வாரணம் ஆயிரம் படத்தின் மூன்று பாடல்கள் இன்டர்நெட்டில் வெளியானது. அதே போல் "வில்லு" படத்தின் சண்டைக்காட்சிகளும் இண்டர் நெட்டில் வெளியானது.13 வருடங்களுக்குப் பறிகு பி.சுசீலா "சில நேரங்களில் படத்தில் பாடினார்.திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு காரசாரமாக பேசியதில் சென்ற வருடம் தினசரி பத்திரிகைகளின் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தார் டைரக்டர் அமீர்.ஆபாசமாக நடிக்கச் சொல்லி கொடுமைப்படுத்தினார் என தந்தை மீது புகார் கூறினார் நடிகை பானு.விக்ரம் தனது பிறந்த நாளையொட்டி கண் தானம் செய்தார். அவருடன் ஆயிரம் ரசிகர்களும் கண்தானம் செய்தனர்.தமிழ் இசை விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக விஜய், சிறந்த நடிகையாக நயன்தாரா விருது பெற்றனர்.கடனை அடைத்துவிட்டு 2 வருங்களில் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என "ராமன் தேடிய சீதை" இசைவெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசினார் சேரன.நடிகர் ஸ்ரீ காந்த் (பழைய நடிகர்) நடிகை ஜெயசித்ரா ஆகியோருக்கு கவிஞர் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. விஸ்வநாதன் ராமமூர்த்தி வழங்கனினார்.கலிபோர்னியா பல்கலைகழகம் நடிகை மனோரமாவுக்கும் டைரக்டர் பாலசந்தருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியது.தவறான நோக்கத்துடன் என் வயிற்றில் கைவைத்தார் என நடிகை மாளவிகா தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு மீது புகார் கூறினார்.பில்லா படம் கேன்ஸ் உலக பட விழாவிலும் "காஞ்சிவரம்" படம் டொரெண்டொ படவிழாவிலும் கோவாவில் நடைபெற்ற உலக படவிழாவிலும், திரையிடப்பட்டது.திரைப்படங்களில் பத்திரிகை தொடர்பாளர் பணி தொடங்கி 50 ஆண்டு நிறைவானது நினைவுபடுத்தும் வகையில் நிறைவானது நினைவுபடுத்தும் வகையில் பொன்விழாவை பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சமீபத்தில் நடத்தியது. இதில் பத்து பி.ஆர்.ஓ க்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.2008 ல் தொடங்கப்பட்ட படங்களில் சுமார் 160 படங்கள் தயாரிப்பில் உள்ளன
Thanks: www.kodambakkamtoday.com

Subscribe to:
Posts (Atom)