பிஆர்.ஓ யூனியன் தலைவராக மீண்டும் விஜயமுரளி தேர்வு
தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர் யூனியனின் தலைவராக விஜயமுரளி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது தலைமையில் கடந்த முறை பொறுப்பிலிருந்தவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நிர்வாகம் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பதவியிலிருக்கும்.
பொதுச் செயலாளராக பெரு. துளசி பழனிவேலும், பொருளாளராக ஆதம்பாக்கம் ராமதாஸும் பொறுப்பேற்றுள்ளனர்.
வி.பி மணி, மதுரை செல்வம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஜி பாலன், கோவிந்தராஜ் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
ஜேவி, டிஎம். ராமன், நெல்லை அழகேஷ், கிளாமர் சத்யா, மதிஒளி குமார், கணேஷ்குமார், ராமானுஜம், மேஜர்தாசன்,வெங்கட் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
Sunday, July 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment