Saturday, July 3, 2010

தமிழ் சினிமா என்றால் கேவலமா?

திநாராயணா' படத்தில் புதிய கதாநாயகன் கஜன் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மீராஜாஸ்மின்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நாயகி மீராஜாஸ்மினும் வரவில்லை.இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவும் வரவில்லை.இவர்கள் வராததை கண்டித்து பேசினார் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயககுநர் பேரரசு."தெலுங்குப் படத்தில் நடித்தாலும், மலையாளப் படத்தில் நடித்தாலும் அந்த பட விழாக்களில் மீராஜாஸ்மின் கலந்து கொள்கிறார்.ஆனால் தமிழ் படத்தில் அதுவும் அவர் நடிக்கிற படத்தோட விழாவில் கலந்துகிறதில்லை.தமிழ் சினிமா என்றால் கேவலமா? இந்த விழாவோட நாயகனே ஸ்ரீகாந்த்தேவா தான்.அவரும் வரவில்லை" என்று பேசியவர் "இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தில் பாடியவர்கள் யாருமே வருவதில்லை.பாடலாசிரியர்களும் பெரும்பாலான விழாக்களுக்கு வருவதில்லை.இது மாற வேண்டும்."என்று வருத்தப்பட்டார்.

கவிஞர் சினேகன் பேசும்போது "படத்தில் பாடியவர்கள் பாடலாசிரியர்கள் ஏன் வருவதில்லை என்றால் இவர்கள் அழைப்பதில்லை.கெளரவிக்கப்படுவதில்லை,இதுதான் காரணம். படத்தின் விளம்பரங்களில் பாடலாசிரியர்கள் பெயரை இருட்டடிப்பு செய்துவருகிறார்கள்.தற்போது  ஓடிக்கொண்டிருக்கும் ஐந்தாறு படங்களில் நான் பாடல் எழுதியிருக்கேன்.ஆனால் விளம்பரங்களில் பெயர் இல்லை,இதுவே கவிஞர் வாலி, வைரமுத்து இவர்களின் பெயர்களை விட்டுவிடுவார்களா?புதிய கலைஞர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள்."என்று தன ஆதங்கத்தை வேண்டுகோளுடன் தெரிவித்தார்.
நன்றி -ஜனசக்தி நாளிதழ் (30 .08 .2009 )



1 comment: