சொன்னதை செய்வாரா
பாலா?
சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதைமுதன்முறையாக "காதல்கோட்டை"
படத்திற்காகப் பெற்றமுதல் தமிழ்ப்பட இயககுநர் அகத்தியன். இரண்டாவதாக இப்போது "நான் கடவுள்"படத்திற்காகச் சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதைஇயககுநர்பாலா பெற்றிருக்கிறார்.விருது பெற்ற சந்தோசத்துடன்
தனது அடுத்த படத்தின் (அவன்இவன் வேலையை தொடங்கிவிட்ட பாலாஅண்மையில்
பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
திரைப்படப்பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து
சால்வை அணிவித்தனர். "வழக்கம் போல சிக்கலான கேள்விகளை நீங்க கேட்கலாம்.வழக்கம் போல நானும் நகைச்சுவையாக பதில் சொல்லலாம்."என்றுஆரம்பிththaபாலா, "சால்வைஎல்லாம் போர்த்தினாங்க.இதை பிச்சைக்காரனுக்கு போட்டிருந்தா குளிருக்காவது தாங்கும்."என்று சொன்னார்.
உண்மைதான்.இந்த சால்வைமட்டுமல்ல அவரை பாராட்டி நிறைய பேர் சால்வை அணிவித்திருப்பார்கள்...அணிவிப்பார்கள்..அதையெல்லாம் கூட பாலா பிச்சைக்காரர்களுக்குப் போர்த்த வேண்டாம்.கொடுத்திருந்தால் குளிருக்குத் தாங்கும்.
செய்தாரா பாலா?
"உங்க படத்துல நடிச்சதுக்காக.நடிக்கிற வாய்ப்பு கிடைச்சதுக்காக கடவுளுக்கு நன்றி
சொல்லணும்' என்று பலர் சொல்றாங்க,தேசிய விருது கிடைச்சதுக்காக நீங்க கடவுளுக்கு நன்றி சொன்னீங்களா?" என்ற கேள்விக்கு பாலாவின் பதில்:
"கடவுள் வந்து நடிக்கல.கடவுள் வந்து மேக்கப் போடல.கடவுள் வந்து லைட் பிடிக்கல.கேமராவை இயக்கல.எவ்வளவோ தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு
உழைச்சிருக்காங்க. அவங்களுக்குதான் நன்றிசொல்லணுமே தவிர இல்லாத கடவுளுக்கு ஏன் நான் நன்றி சொல்லணும்?" என்றார்.
இல்லாத கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டாம்.இருக்கிற - படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை அழைத்து அனைவருக்கும் நன்றி சொல்லியிருக்கலாமே..
செய்தாரா பாலா?
பாலாவை வைத்து படம் பண்ணிய தயாரிப்பளர்களின் நிலைமை அனைவரும் அறிந்ததே.
தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு ஒரு நிருபர் கேள்வி கேட்டபோது
"கமர்ஷியலா அவங்க லாபம் அடைஞ்சிருக்காங்க.சிலர் நஷ்டம் அடைஞ்சிருக்காங்க.
படத்தோட தாமதத்தினாலும்,என்னோட நடவடிக்கையாலும் அவங்க மனசை காயப்படுத்தியிருக்கேன்.அதற்க்கெல்லாம் இப்ப வருத்தத்தை தெரிவிச்சிக்கிறேன்."என்றார்.
அந்த நிருபர் இந்தக் கேள்வியைக் கேட்காமல் போயிருந்தால் இந்த வருத்தத்தையும் தெரிவிச்சிருக்க மாட்டார்.அப்படித்தானே?
எப்படியோ... "இனி அதுபோல் நடக்காது.'அவன்-இவன்' படத்தை ஆறுமாதத்திற்குள் முடித்து விடுவேன்" என்று சொல்லியிருக்கிறார் பாலா.இந்த பதில் அந்த படத் தயாரிப்பாளரை சந்தோசப்படுத்தியிருக்கிறது.
"வழக்கம்போல் நானும் நகைச்சுவையாக பதில் சொல்றேன்."என்று பாலா ஆரம்பத்தில் சொல்லியிருந்தாலும் இந்தப் பதிலை தயாரிப்பாளர் உள்பட பலரும் சீரியசாகவே எடுத்துக் கொண்டுள்ளனர்.
பாலா சொன்னது போல் செய்ய வேண்டும்.
செய்வாரா பாலா?
நன்றி:ஜனசக்தி நாளிதழ் (19 .02 .2010 )
Cinemala ethalam sakachamappa
ReplyDelete