Sunday, July 11, 2010

                    "வாக்குமூலம்"
       
          சமுதாய சிந்தனையுள்ள குறும்படம்
  க்கள  பிரச்சனையை  சொல்லக்கூடிய,மக்களுக்கான சினிமாவாக மட்டுமே உருவாகிவருவது குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள்தான் என்று சொல்லலாம். 
"வாழ்க்கைக்குத் தேவையான-வாழ்க்கையை செம்மைப்படுத்துகிற முயற்சி தான் இந்த குறும்படங்கள்' என்கிறார் குறும்பட இயககுநர் க..சுப்பு.
இவர் இயக்கியிருக்கும்  குறும்படம் 'வாக்குமூலம்'.வேலிகாத்தான் என்று சொல்லக்கூடிய காட்டுக் கரவேல மரங்களின் வளர்ச்சியையும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய ஆபத்தினையும்,மரபணு மாற்று விதைகள் மூலம் ஏற்படும் தீமைகளையும் கதாபாத்திரங்கள் மூலம் 'வாக்குமூலம்' கொடுக்கிறது இந்த குறும்படம்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த குறும்படத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி? இயககுநர் க.சுப்புவிடம் கேட்டோம்.
"பெரிய இயக்குநர்களின் உதவியாளர் என்கிற முகவரி இருந்தால் உடனே படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது.அந்த ஒரே காரணத்திற்க்காக வாய்ப்பு கொடுக்கப்பட்டு தோல்வியடைந்த படங்கள் நிறைய
இருக்கின்றன.குறும்படங்கள்,திரைப்படம் இயக்குவதற்கான சரியான முகவரியாக இருக்கும் என்று நினைத்தேன்.இதன்மூலம் அவனுடைய ஆளுமை,சிந்தனை இதெல்லாம் வெளிப்படுகிறது.இது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்னு சொல்லுவேன்.
என் சொந்த ஊரான கும்பகோணத்தில் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு பொதுககூட்டத்தைப் பார்க்கிறேன்.நாம் விரும்புகிறோமோ,இல்லையோ பொதுவுடைமை தத்துவங்கள் நம்ம காதுகளில் விழும்.அப்படித்தான் அந்த மேடைப் பேச்சைக் கேட்க நேர்ந்தது.
வறட்சி பிரதேசத்திற்க்கான அடிப்படை நம்ம பஞ்சக் காலத்தில் ஒரு வல்லரசு கொடுத்த காட்டு கருவேல மரங்கள்தான் காரணம்,அதை அழிக்கணும்னு பேசறாங்க.அது ஒரு செய்தியாக என் மனதில் பதிஞ்சு போனது.
சென்னை வந்து சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தபோது அந்த செய்திக்கான ஆதாரங்களை சேகரிக்கும்போது ரசாயன உயிர்க்கொல்லிகள்,செயற்கை வண்டுகள்,ஆகாயத் தாமரைச் செடிகள்,கருவேல மரங்கள்,மரபண   மாற்று விதைகள்,இடத்தை கபளீகரம் பண்றது என கிட்டத்தட்ட 50  காரணங்களை தேர்ந்தெடுத்தேன். 
நமக்கு இப்ப என்ன தேவை அப்படின்னு பார்க்கும்போது கருவேல மரங்களின் வளர்ச்சியில் காற்று உஷ்ணமாகி பூமி வெப்பமடைவது மரபணு மாற்று விதைகளினால் மனிதர்களும் ,விலங்குகளும் மலட்டுத்தன்மை அடைவது, உலக பொருளாதார மயமாக்களில் இடத்தை கபளீகரம் பண்றது என மூன்று விசயங்கள் முதன்மையாக -முக்கியமாய் தெரிந்தது.இதை குறும்படமாக எடுக்க முயற்சித்தபோது என் சமுதாய அக்கறையை புரிந்து கொண்டு நண்பர் மெடிக்கல் சத்யா தயாரிப்பதற்கு முன் வந்தார்.அவர் கொடுத்த ஊக்கமும் அவர் கொடுத்த முதலீட்டுத் தொகையும் 'வாக்குமூலம்' உருவாக காரணமாக அமைந்தது."என்கிறார்.
க.சுப்பு திரைப்படம் இய்க்கும்  முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
"வணிக ரீதியிலான படங்கள் செய்தாலும் என் கோப தாபங்கள் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கும்.காதல் படங்களிலும்  சமுதாய சிந்தனை இருக்கும்" என்கிறார்.
சமுதாய  சிந்தனையுள்ள படைப்பாளியை மக்கள் எப்போதும்  உற்சாமாக வரவேற்பார்கள்.
நன்றி;ஜனசக்தி நாளிதழ் (11 .10 .2009 )

No comments:

Post a Comment