முதன்முதலாக டாக்குபிஷன் பார்மெட்டில் எடுக்கப்பட்ட படம்.
முதன்முதலாக மூன்று இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய படம்.
முதன்முதலாக சினிமா பார்முலாவிலிருந்து விலகி எடுக்கப்பட்ட திகில் படம்.
Paranormal investigation என்ற புது prosession ஐ அறிமுகப்படுத்தியுள்ள படம்.
முதன்முதலாக கதாநாயகன்,கதாநாயகி இல்லாமல் எடுக்கப்பட்ட படம்
இப்படி நிறைய முதன்முதலாக என்ற சிறப்பு ஷங்கர் பிரதர்ஸின் 'ஓர் இரவுபடத்திற்கு உண்டு என்கின்றனர் இயக்குனர்கள் ஹரிஷங்கர்,ஹரிஷ் நாராயண்,கிருச்னசெகர் ஆகிய மூவரும்.
"பெரும்பாலும் ஆவிகள் பேய்கள் போன்ற விசயங்களுக்கு இன்றுவரை ஆதாரமில்லை.அப்படிப்பட்ட ஆதாரத்தை சேகரிக்கும் முயற்சியில் நகுலன் பொன்னுசாமி என்ற அமானுஷ்ய ஆராச்சியாளர் மூணாரில் உள்ள பிரபல தொழிலதிபரின் பூர்விக சொத்து இருக்கும் இடத்திற்கு சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.ஒரு இரவு முழுதும் தனியாக தங்கி ஆராயும் அவர் மர்மமானமுறையில் இறக்கிறார்.அவரது மரணத்தின் மர்மத்தை டெய்சி என்ற பெண் டிவி நிருபர் ஆராய்ந்து விடை காண முயலுவது 'ஓர் இரவு' படத்தின் கதை.படத்தின் பெரும்பாலான காட்சிகள் வியு பாயிண்டில் எடுக்கப்பட்டுள்ளதால் படம் பார்ப்பவர்களே கதாநாயகனாக மாறி படத்தின் நாயகனுக்குஏற்படும் அனுபவத்தை நேரடியாக உணர முடியும்.பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அவர்கள் பகிர்நத கொண்ட உண்மையான அமானுஷ்ய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கினோம்.இசையமைப்பாளர் வெங்கட் பிரபு ஷங்கர் காட்சிகளின் பின்னணியில் தனிமை,தேடல்,பயம்,மௌனம் எனநான்கு விதமான உணர்வுகளை இசையில் வெளிப்படுத்தியுள்ளார்.ஓர் இரவபடம்மற்ற திகில் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.அந்த வித்தியாசத்தை நீங்கள் படம்பார்க்கும்போது உணருவீர்கள்."என்கிறார் இயக்குனர்களில் ஒருவரும் தயாரிப்பாளருமான ஹரி ஷங்கர்.
படத்தில்வரும் துணை கதாபாத்திரங்களில் சதீஷ்,ஜி,ஹெவந்திகா,ஆஷா,சந்திரசேகர்,கிருஷ்ண சேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.விரைவில் திகிலூட்ட வருகிறது 'ஓர் இரவு'
No comments:
Post a Comment